மாதமிருமுறை 01 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது...

இன்றைய சொற்பொழிவு...

"நமக்கு எல்லாம் தெரிந்திருக்கிறது. மற்றவருக்கு என்ன தெரியும்?" என்று நினைத்துக் கொண்டு தருக்குற்று இருக்கக் கூடாது. கற்றது கைமண்ணளவு. கல்லாதது உலகளவு. எல்லாம் தெரிந்தவர்களும் உலகில் இல்லை. எதுவுமே தெரியாதவர்களும் உலகில் இல்லை. ஆதலால் அடக்கமாகவும் பணிவாகவும் இருக்க வேண்டும். பணிவு மனிதனின் வாழ்வை உயர்த்தும். - திருமுருகக் கிருபானந்த வாரியார்

மகளிருக்கான அழகுக் குறிப்புகள்...



  • சீதாப்பழத்தின் கொட்டைகளை இரண்டு நாட்கள் நன்கு சூரிய வெப்பத்தில் காய வைத்து பொடி செய்து தேங்காய் எண்ணையில் கலந்து வைத்து இரவில் தலைக்குத் தடவி காலையில் வெதுவெதுப்பான நீரில் குளித்து வந்தால் பேன்கள் தொல்லை ஒழியும்.

  • இரண்டு தேக்கரண்டி வெந்தயத்தை ஊற வைத்து அரை கப் தேங்காய்ப்பால் சேர்த்து நன்கு மையாக அரைத்துதனுடன் மூன்று தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலந்து தலைக்குத் தேய்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து அதன் பின்பு குளித்து வந்தால் விரைவில் பொடுகு தொல்லை நீங்கும்.

  • தேங்காயெண்ணெய்யைக் காய்ச்சி, அதில் சிறிது கறிவேப்பிலையைப் போட்டு மூடி வைத்து, இந்த எண்ணெயை அடிக்கடி தலையில் தேய்த்துக் குளித்து வந்தால் முடி நன்கு வளரும்.

  • ஆலிவ் எண்ணெயில் ஒரு முட்டை கலந்து தேய்த்து தலை குளித்து வந்தால் முடி உதிர்வது குறையும்.

  • தேநீரில் வடிகட்டிய பின், மிஞ்சும் தேயிலைத் தூளில் எலுமிச்சை சாறை பிழிந்து, தலையில் தேய்த்துக் குளித்தால், தலைமுடி பளபளப்பாகும்.

  • பூசணிக்காயை சிறு துண்டுகளாக்கி அதை கண்களை சுற்றி வைக்க கண்களைச் சுற்றி ஏற்படும் கருவளையம் மறையும்.

  • திரவ மெழுகைச் சுத்தமான மஞ்சள் தூளுடன் கலந்து வைக்கவும். தினமும் இரவில் உப்பு கலந்த சற்று சூடான நீரில் பாதங்களை பத்து நிமிடங்கள் வைத்திருக்கவும். பிறகு இந்த மருந்துக் கலவையை பாதங்களில் பூசி படுக்கவும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் வெடிப்புக்கள் முழுவதுமாக நீங்கி பாதங்கள் பளபளக்கும்.

  • புதினா, எலுமிச்சை இலை இரண்டையும் ஒரு கைப்பிடி எடுத்து கொதிக்கும் சுடுநீரில் போட்டு ஆவி பிடித்து வந்தால் முகம் அழகாகும். இது வாரத்திற்கு ஒரு முறை செய்தால் போதுமானது.

  • முதல் நாள் இரவு சிறிது பாலில் ஒரு தேக்கரண்டி கசகசாவை ஊற வைக்கவும். மறு நாள் காலை முகத்தில் தடவி காய்ந்ததும் கழுவவும். இதைத் தொடர்ந்து செய்தால் முகம் நாளடைவில் சிவக்க ஆரம்பிக்கும்.

  • பப்பாளி பழத்தை அரைத்து, முகத்தில் தொடர்ந்து தடவி வர முகப்பரு, கரும்புள்ளி ஆகியவை மறையும்.

  • முழங்கை, முழங்கால் பகுதி கருப்பாகவும், சொர சொரப்பாகவும் இருந்தால், தேங்காய் எண்ணெயுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவி வர மிருதுவாக மாறும்.

  • தேன் மற்றும் எலுமிச்சைச் சாறு கலந்த கலவையை உதட்டின் மீது தொடர்ந்து தடவி வந்தால், உதட்டிலுள்ள கருமை நிறம் மறையும்.

  • கொத்தமல்லி இளம் இலையின் சாறினை இரவில் உதடுகளில் பூசி விட்டு காலையில் எழுந்து கழுவுங்கள் உதடுகள் சுருக்கம் நீங்கி சிவப்பழ‌கு பெறும்.

  • கோதுமை மாவு, கடலைமாவு எலுமிச்சை சாறு கலந்து தேய்க்கவும். இதனை தேவையில்லாத ரோமங்கள் இருக்கும் இடங்களில் தேய்த்து நன்றாக ஊறிய பின்பு வெது வெதுப்பான நீரில் அலசவும். தேவையற்ற ரோமங்கள் வளராது.