மாதமிருமுறை 01 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது...

இன்றைய சொற்பொழிவு...

"நமக்கு எல்லாம் தெரிந்திருக்கிறது. மற்றவருக்கு என்ன தெரியும்?" என்று நினைத்துக் கொண்டு தருக்குற்று இருக்கக் கூடாது. கற்றது கைமண்ணளவு. கல்லாதது உலகளவு. எல்லாம் தெரிந்தவர்களும் உலகில் இல்லை. எதுவுமே தெரியாதவர்களும் உலகில் இல்லை. ஆதலால் அடக்கமாகவும் பணிவாகவும் இருக்க வேண்டும். பணிவு மனிதனின் வாழ்வை உயர்த்தும். - திருமுருகக் கிருபானந்த வாரியார்


தூங்காப் புளியமரம்



ஆன்மிகத்திற்கும், புளியமரத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. பல கோவில்களில் புளியமரம் தலவிருட்சமாக உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுயம்புலிங்கசுவாமி கோவில் அமைந்துள்ள உவரிக்கு அருகே உள்ள குட்டம் என்ற கடற்கரையோர கிராமத்தில் ஸ்ரீஆனந்தவல்லி அம்மன் கோவில் ஒன்று உள்ளது. இந்தக் கோவிலின் முன்பு பிரம்மாண்டமான புளியமரம் ஒன்று காணப்படுகிறது.  

இந்த மரத்தின் வயது 300-க்கும் மேல் இருக்கும் என்கிறார்கள். இதை "தூங்காப்புளியமரம்" என்று அழைக்கிறார்கள். அதாவது, சாதாரண புளிய மரங்களைப் போல் இந்த அதிசய புளியமரத்தின் இலைகள் இரவு நேரத்தில் தூங்காது. அதாவது, மடிந்துபோய் இருக்காது. எப்போதும் ஃப்ரெஸ் ஆகவே இருக்கும். மேலும், இந்த புளியமரத்திற்கு பல்வேறு நோய்களை தீர்க்கும் அபார சக்தியும் உள்ளது. இந்த புளியமரத்தின் இலையை அரைத்துக் குடித்தால் எப்பேற்பட்ட நோயும் குணமாகிவிடும் என்று இங்குள்ளவர்கள் நம்புகிறார்கள்.

குட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வசிக்கிறார்கள். அவர்கள், தங்கள் ஊருக்கு வரும் போது, இந்த தூங்காப் புளியமரத்தின் இலைகளை தவறாமல் பறித்து கொண்டுச் செல்கிறார்கள். இந்த இலைகள் தங்களுடன் இருக்கும் பட்சத்தில், தங்களுக்கு எல்லாமே வெற்றியாக அமையும் என்ற அவர்களது நம்பிக்கையும் இதற்கு காரணம்.