மாதமிருமுறை 01 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது...

இன்றைய சொற்பொழிவு...

"நமக்கு எல்லாம் தெரிந்திருக்கிறது. மற்றவருக்கு என்ன தெரியும்?" என்று நினைத்துக் கொண்டு தருக்குற்று இருக்கக் கூடாது. கற்றது கைமண்ணளவு. கல்லாதது உலகளவு. எல்லாம் தெரிந்தவர்களும் உலகில் இல்லை. எதுவுமே தெரியாதவர்களும் உலகில் இல்லை. ஆதலால் அடக்கமாகவும் பணிவாகவும் இருக்க வேண்டும். பணிவு மனிதனின் வாழ்வை உயர்த்தும். - திருமுருகக் கிருபானந்த வாரியார்

ஆக்ரோஷமான பெண்களுக்கு ஆண் குழந்தை



ஆண் குழந்தை வேண்டும் என்கிற ஆசை பலருக்கும் இருக்கிறது. இந்த ஆசை இந்தியாவில் மட்டுமில்லை, உலகம் முழுக்க அனைத்து நாடுகளிலுமே இந்த ஆசை இருக்கத்தான் செய்கிறது. நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இது குறித்து ஒரு ஆய்வை மேற்கொண்டார்கள். இந்த ஆய்வின் முடிவை சமீபத்தில் வெளியிட்டுள்ளனர். அதில், தங்கள் நிலைப்பாட்டை வலியுறுத்தும் ஆக்ரோஷமான பெண்களுக்கு ஆண் குழந்தை பிறக்க அதிக வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப்பெண்களின் கருப்பையில் டெஸ்டோடீரோன் ஹார்மோன்கள் அதிகமாக இருக்கும். இதனால், அவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்க அதிகமாக வாய்ப்பு ஏற்படுகிறது. பிறக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை நிர்ணயிப்பதில் ஆண்களின் உயிரணுவில் உள்ள குரோமோசாம்தான் முக்கியப் பங்கு வகிக்கிறது. "எக்ஸ்" குரோமோசோம் கொண்ட உயிரணுவால் பெண் குழந்தையும், "ஒய்" குரோமோசோம் கொண்ட உயிரணுவால் ஆண் குழந்தையும் உருவாகும்.

கருப்பையில் டெஸ்ட்டோஸ்டீரோன் ஹார்மோன் அதிகமிருந்தால் "ஒய்" குரோமோசோம் கொண்ட உயிரணுதான் பெண்ணின் கருமுட்டையை எளிதில் அடைய முடிகிறது. இதனால் ஆண் குழந்தை பிறப்பதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இயற்கையிலேயே இந்த குணநலன்களைப் பெற்றுள்ள பெண்களுக்குத்தான் இந்த ஆய்வு முடிவுகள் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.