மாதமிருமுறை 01 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது...

இன்றைய சொற்பொழிவு...

"நமக்கு எல்லாம் தெரிந்திருக்கிறது. மற்றவருக்கு என்ன தெரியும்?" என்று நினைத்துக் கொண்டு தருக்குற்று இருக்கக் கூடாது. கற்றது கைமண்ணளவு. கல்லாதது உலகளவு. எல்லாம் தெரிந்தவர்களும் உலகில் இல்லை. எதுவுமே தெரியாதவர்களும் உலகில் இல்லை. ஆதலால் அடக்கமாகவும் பணிவாகவும் இருக்க வேண்டும். பணிவு மனிதனின் வாழ்வை உயர்த்தும். - திருமுருகக் கிருபானந்த வாரியார்

பைபிள் சொல்லும் " தேவையான மூன்று "




இருக்க வேண்டியது:  தூய்மை,  நீதி,  நேர்மை.

ஆள வேண்டியது: கோபம்,  நாக்கு,  நடத்தை.

பெற வேண்டியது:  அன்பு,  தைரியம்,  மென்மை.

கொடுக்க வேண்டியது:  இல்லாதவருக்கு ஈதல்,  துன்பத்திற்கு ஆறுதல்,   தகுதிக்குப் பாராட்டு.

அடைய வேண்டியது:  ஆன்ம சுத்தம், முயற்சி,  உள்ள மகிழ்வு.

தவிர்க்க வேண்டியது: துன்பம் செய்தல்,  முரட்டுத்தனம்,  நன்றி இல்லாமை.