மாதமிருமுறை 01 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது...

இன்றைய சொற்பொழிவு...

"நமக்கு எல்லாம் தெரிந்திருக்கிறது. மற்றவருக்கு என்ன தெரியும்?" என்று நினைத்துக் கொண்டு தருக்குற்று இருக்கக் கூடாது. கற்றது கைமண்ணளவு. கல்லாதது உலகளவு. எல்லாம் தெரிந்தவர்களும் உலகில் இல்லை. எதுவுமே தெரியாதவர்களும் உலகில் இல்லை. ஆதலால் அடக்கமாகவும் பணிவாகவும் இருக்க வேண்டும். பணிவு மனிதனின் வாழ்வை உயர்த்தும். - திருமுருகக் கிருபானந்த வாரியார்

காய்கறிகளின் சிறப்பு




கறிவேப்பிலை  - முடியை வளர்க்கும்.

கீரை வகைகள் - இரும்புச் சத்து உண்டு.

வாழைக்காய்  - வயிற்றுப் புண்ணை ஆற்றும்.

வெண்டைக்காய் - மூளை வளர்ச்சிக்குச் சிறந்தது.

வாழைப்பூ, வாழைத்தண்டு - சிறு நீரகத்தை வலுப்படுத்தும்

டர்னிப், முள்ளங்கி, முருங்கைக்காய் - நரம்புத் தளர்ச்சியைப் போக்கும்.

தடியங்காய், வெள்ளைப் பூசனி - ஆஸ்துமாவுக்குச் சிறந்த மருந்து

நெல்லிக்காய் - பித்தம், கபம், ஜுரம் ஆகியவற்றைக் குறைக்கும்.

அவரை, கொத்தவரை, பீன்ஸ் - இதயத்தை வலுப்படுத்தும்

தேங்காய், முட்டைகோஸ் - எலும்பை உறுதிப்படுத்தும்.

காரட், பீட்ரூட், நூக்கல் - கண்ணுக்கு நல்லது.

சேப்பங்கிழங்கு - நினைவாற்றலை வளர்க்கும்.

பருப்பு வகைகள் - உடலை வளர்க்கும்.

எலுமிச்சை - சோர்வு அகற்றும், பேதி நிற்கும், தலைவலி, தேள்கடி, மலச்சிக்கல், தொண்டை கரகரப்பு, வலி, நீர்க்கடுப்பு, உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய்களைத் தடுக்கும் சமய சஞ்சீவி   

வாழைப்பழமும் அதன் பயன்களும்

மஞ்சள் வாழை - குடற்புண்களை அகற்றும்.

மொந்தன் வாழை - உடல் வறட்சியைப் போக்கும்.

அடுக்கு வாழை - உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும்.

மலை வாழைப்பழம் - உடல் பலம், இரத்த விருத்தி ஏற்படும்.

நேந்திரம் வாழை - பசி ஏற்படுத்தும், ஜுரணத்தை ஏற்படுத்தும்.

ரஸ்தாளி - ஆப்பிளில் உள்ள (ஏழைகளின் ஆப்பிள்) சத்துகள் இதில் உண்டு

செவ்வாழை - நரம்புத் தளர்ச்சி, பல்நோய் போக்கும், ஆண்மையை வளர்க்கும்.

பேயன் வாழை - அம்மை நோயால் குடலில் சேறும் நஞ்சு வேக்காடுகளை அகற்றும்.