பறவைகள்- சில தகவல்கள்

- ரோடுரன்னர் என்ற பறவை 40 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடக்கூடியது.ஆனால் இது பறக்காது.
- நீரிலும் நிலத்திலும் வாழும் பறவை பென்குயின்.
- கிளிகள் 54 ஆண்டுகள் வரை உயிர் வாழும்.
- புறாக்கள் மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கக் கூடியது.
- ரென் என்ற பறவை தன் குஞ்சுகளுக்கு ஒரு நாளில் 1,271 முறை உணவு ஊட்டிவிடுமாம்.
- சில்லிமட் எனும் ஆர்க்டிக் பிரதேச கடல் பறவையில் ஆண் இனம்தான் முடடையிடும்.
- கோல்டன் கழுகு வெவ்வேறு இடங்களiல் இரண்டு கூடுகள் கட்டி வைத்துக் கொண்டு, ஆண்டுக்கொருமுறை கூட்டை மாற்றிக் கொள்ளுமாம்.
- கிவி என்ற பறவைக்கு இறகுகளுமில்லை. அதனால் பறக்கவும் முடியாது.
- ஹம்மிங் பறவையால் மட்டுமே பின்னோக்கிப் பறக்க முடியும். இப்பறவைகளுக்கு பற்கள் கிடையாது. இப்பறவையால் நடக்கவும் இயலாது.
- பறவைகளிலேயே அதிக அளவில் சிறகுகள் கொண்ட பறவை அன்னப் பறவைதான்.
- மார்ஷ் வார்ப்னர் என்ற பறவை மற்ற பறவைகளைப் போல் குரலை மாற்றி ஒலி எழுப்பும் திறன் படைத்தது.
- டெரின் எனும் பறவை எட்டு மாதங்கள் வரை தொடர்ந்து நிற்காமல் பறக்கும் திறனுடையவை.
- பறவைகள் எவ்வளவு பறந்தாலும் அதற்கு வியர்க்காது. ஏனென்றால் அவற்றுக்கு வியர்வைச் சுரப்பிகள் கிடையாது.
- பூங்கொத்திப் பறவைகளின் எடை ஐந்து கிராம் மட்டுமே.
- ஆண்டியன் காண்டார் என்ற கழுகு வகைதான் பறவை இனங்களிலேயே அதிக ஆண்டு உயிர் வாழக்கூடியது.
- ஸ்பின் வால் ஸ்விப்ட் எனும் பறவை மணிக்கு 171 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் திறன் கொண்டது.