மாதமிருமுறை 01 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது...

இன்றைய சொற்பொழிவு...

"நமக்கு எல்லாம் தெரிந்திருக்கிறது. மற்றவருக்கு என்ன தெரியும்?" என்று நினைத்துக் கொண்டு தருக்குற்று இருக்கக் கூடாது. கற்றது கைமண்ணளவு. கல்லாதது உலகளவு. எல்லாம் தெரிந்தவர்களும் உலகில் இல்லை. எதுவுமே தெரியாதவர்களும் உலகில் இல்லை. ஆதலால் அடக்கமாகவும் பணிவாகவும் இருக்க வேண்டும். பணிவு மனிதனின் வாழ்வை உயர்த்தும். - திருமுருகக் கிருபானந்த வாரியார்


எந்த ஆட்சி நடக்கிறது?




மன்னராட்சி, மக்களாட்சி, இராணுவ ஆட்சி கேள்விப் பட்டிருக்கிறோம். மற்ற ஆட்சிகளைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?
  • மன்னராட்சி - Monarchy
  • மக்களாட்சி - Democracy
  • இராணுவ ஆட்சி - Stratocracy
  • சட்டமில்லா ஆட்சி - Anarchy
  • வசதி படைத்தோர் ஆட்சி - Aristocracy
  • ஒரு மனிதன் ஆட்சி - Autocracy
  • அலுவலர்களின் ஆட்சி - Bureaucracy
  • இரட்டை ஆட்சி -Diarchy
  • சர்வாதிகார ஆட்சி - Dictatorship
  • வேலையாட்களின் ஆட்சி - Eragtocracy
  • இன ஆட்சி - Ethnacracy
  • முதியோர்களின் ஆட்சி - Gerontocracy
  • பெண்களின் ஆட்சி - Gynocracy
  • பாதிரியார்களின் ஆட்சி - Heirocracy
  • சம அதிகார ஆட்சி - Isocracy
  • அயோக்கியர்களின் ஆட்சி - Kakistocracy
  • அரசின் திரைக்குப் பின்னாலான ஆட்சி - Kitchen Cabinet
  • அன்னையின் ஆட்சி - Matriarchy
  • தகுதி படைத்தோர் ஆட்சி - Meritocracy
  • கொள்ளையர்களின் ஆட்சி - Ochlocracy
  • சிறுபான்மையினத்தோரின் ஆட்சி - Oligarchy
  • வளமானோர் ஆட்சி - Plutocracy
  • தொழில் நுட்பாளர்களின் ஆட்சி - Technocracy
  • கடவுள் சித்தாந்த ஆட்சி - Theocracy