மகன் : டூத் ப்ரஷினால டாய்லெட் சுத்தம் செய்வேன்.
தந்தை : அதனால எப்படி கோபம் கட்டுப்படும்!!!
மகன் : அந்த ப்ரஷ் உங்க ப்ரஷ் ஆச்சே. ஹி..ஹி.
***
வானம் பொழிகிறது; பூமி விளைகிறது;
உனக்கு ஏன் அனுப்ப வேண்டும் எஸ்.எம்.எஸ்.
என்னோடு கடைக்கு வந்தாயா?
செல் வாங்கித் தந்தாயா?
ஓசி சிம்கார்டு கொடுத்தாயா?
பில் பணமாவது கட்டினாயா?
அல்லது உன்னோடு கொஞ்சி விளையாடும்
உன் அழகான கேர்ள் பிரண்ட்சுக்கு
என் நம்பரையாவது கொடுத்தாயா!!
மானங்கெட்டவனே!
யாரிடம் கேட்கிறாய் எஸ்.எம்.எஸ்.
எடு உன் செல்லை;
போடு அதைக் கீழே;
எடு ஒரு கல்லை;
கல்லைப் போட்டு நொறுக்கு உன் செல்லை.
உனக்கு ஏன் அனுப்ப வேண்டும் எஸ்.எம்.எஸ்.
என்னோடு கடைக்கு வந்தாயா?
செல் வாங்கித் தந்தாயா?
ஓசி சிம்கார்டு கொடுத்தாயா?
பில் பணமாவது கட்டினாயா?
அல்லது உன்னோடு கொஞ்சி விளையாடும்
உன் அழகான கேர்ள் பிரண்ட்சுக்கு
என் நம்பரையாவது கொடுத்தாயா!!
மானங்கெட்டவனே!
யாரிடம் கேட்கிறாய் எஸ்.எம்.எஸ்.
எடு உன் செல்லை;
போடு அதைக் கீழே;
எடு ஒரு கல்லை;
கல்லைப் போட்டு நொறுக்கு உன் செல்லை.
***
"ஏங்க.. நாளைக்குத்தான் நம்ம கல்யாண நாள். எப்படிக் கொண்டாடலாம்?"
"ரெண்டு நிமிஷம் மவுன அஞ்சலி செலுத்துவோம்!"
******
"பேங்க்லே கடன் வாங்கி பைக் வாங்கினேன் இல்லையா? கடனைக் கட்ட முடியாததால பைக்கைத் தூக்கிட்டுப் போயிட்டாங்க"
"ஓ!! இப்படினு தெரிஞ்சிருந்தா பேங்க்லே கடன் வாங்கி கல்யாணம் பண்ணிருந்திருப்பேனே!!"
******
அடர்ந்த காட்டில்..
"ஏண்டா.. ஷூ மாட்டிக்கிறே?"
"புலி நம்மைப் பார்த்து துரத்துச்சினா! அதுக்குத்தான்"
"புலியை விட வேகமா ஓடிடுவியோ?"
"புலியை விட வேகமா ஓடணும்னு அவசியம் இல்ல. உன்னை விட வேகமா ஓடினாலே போதும்!"
******
"மதுரை பஸ் பத்து மணிக்கு மேலே வரும்னு சொன்னாங்க.. அதான்!"
******
"நான் என் கேர்ள் ஃபிரெண்டுக்கு கால் பண்ணணும். இங்கே எவ்வளவு காசு ஆகும்?"
"காசெல்லாம் கிடையாது. நரகம் டூ நரகம் அன்லிமிட்டெட் ஃப்ரீதான்!"
******
"உங்க காலேஜுல சுமாரா எத்தனை பேரு இருப்பாங்க?"
"எங்க காலேஜுல எல்லாருமே பார்க்க சுமாராதான் இருப்பாங்க"
******
திருடன் இரவில் வீட்டினுள் நுழைந்து பணத்தைத் திருடிக்கொண்டு போகும்போது, சிறுவன் விழித்துக் கொள்ள...
"ஏய்.. சத்தம் போடாதே.. குத்திடுவேன்"
"நான் சத்தம் போடறதெல்லாம் இருக்கட்டும். போகும்போது மரியாதையா என் ஸ்கூல் பேக்கையும் சேர்த்துத் தூக்கிட்டுப் போ'
************
கணவன் : ஏண்டி அப்படி என்ன தலைபோற அவசரம்னு ஆட்டோ பிடிச்சு ஆபீசுக்கே வந்திருக்கிறே?
மனைவி : நம்ம வீட்டு வேலைக்காரியைக் காணோம். சந்தேகமாப் போச்சு. நீங்களாவது ஆபீசில இருக்கீங்களான்னு பார்க்கத்தான் வந்தேன்!
************
கடவுள்: மனிதா உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்?
மனிதன்: இந்தியாவுலேர்ந்து அமெரிக்காவிற்கு ரோடு போட்டு கொடுங்க சாமி!!
கடவுள்: அது கஷ்டமாச்சே...வேறு ஏதாவது கேள்.
மனிதன்: அப்ப என் மனைவி பேச்சை குறைக்கணும், நான் சொல்றதை கேட்கனும், எதையும் வாங்கிக் கேட்க கூடாது...
கடவுள்: அமெரிக்காவுக்கு ரோடு சிங்கிளா, டபுளா...?
************
மனைவி: ஏங்க... கொஞ்சம் வாங்க... குழந்த அழுவுது...
கணவன்: அடி செருப்பால! ... உன்னை எவண்டி மேக்-அப் இல்லாம குழந்தைப் பக்கத்துல போக சொன்னது?
************