மாதமிருமுறை 01 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது...

இன்றைய சொற்பொழிவு...

"நமக்கு எல்லாம் தெரிந்திருக்கிறது. மற்றவருக்கு என்ன தெரியும்?" என்று நினைத்துக் கொண்டு தருக்குற்று இருக்கக் கூடாது. கற்றது கைமண்ணளவு. கல்லாதது உலகளவு. எல்லாம் தெரிந்தவர்களும் உலகில் இல்லை. எதுவுமே தெரியாதவர்களும் உலகில் இல்லை. ஆதலால் அடக்கமாகவும் பணிவாகவும் இருக்க வேண்டும். பணிவு மனிதனின் வாழ்வை உயர்த்தும். - திருமுருகக் கிருபானந்த வாரியார்


இந்தியாவின் புகழ் பெற்ற நடனங்கள்


இந்தியாவிலுள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் குறிப்பிட்ட நடனம் சிறப்பாக இருக்கிறது. கீழே மாநிலம் வாரியாக புகழ் பெற்ற நடனங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு
கோலாட்டம், கும்மியாட்டம், தெருக்கூத்து, பரதநாட்டியம்

கேரளா
சாக்கியார் கூத்து, கதகளி, மோகினிஆட்டம், ஓட்டம் துள்ளல், தாசி ஆட்டம், கூடி ஆட்டம், கிருஷ்ணா ஆட்டம்

ஆந்திரா
குச்சுப்பிடி, கோட்டம், வீதி பகவதம்

கர்நாடகம்
யக்ஷகானம்.

ஒரிசா
ஒடிசி

மணிப்பூர்
மணிப்புரி, லாய்-ஹரோபா

பஞ்சாப்
பாங்ரா, கிட்டா

பீகார்
பிதேஷியா, ஜட்டா-ஜட்டின், லாகூய், நாச்சாரி

அஸ்ஸாம்
பிகு, கேல்-கோபால், தோபல்-சௌக்பீ

ஜம்மு-காஷ்மீர்
சக்ரி, ரூக்ப்

ராஜஸ்தான்
சமர் கிண்டாட், தாண்டியா, கண்கோர், கோபி லீலா, ஜீமர், காயல்

மேற்கு வங்காளம்
சௌ, ஜத்ரா

குஜராத்
குர்பா ஆட்டம், கணபதி பஜன், ராஸ்லீலா

இமாச்சலப் பிரதேசம்
கீதா, கர்யாலா, லூடி ஆட்டம், முனீரா ஆட்டம்

உத்திரப்பிரதேசம்
நௌதாங்கி

மத்தியப்பிரதேசம்
பாண்டவாணி

ஹரியானா
ஸ்வாங்

மஹாராஷ்டிரா
தமாஷா

மேகாலயா
வங்காள லகூகி