மாதமிருமுறை 01 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது...

இன்றைய சொற்பொழிவு...

"நமக்கு எல்லாம் தெரிந்திருக்கிறது. மற்றவருக்கு என்ன தெரியும்?" என்று நினைத்துக் கொண்டு தருக்குற்று இருக்கக் கூடாது. கற்றது கைமண்ணளவு. கல்லாதது உலகளவு. எல்லாம் தெரிந்தவர்களும் உலகில் இல்லை. எதுவுமே தெரியாதவர்களும் உலகில் இல்லை. ஆதலால் அடக்கமாகவும் பணிவாகவும் இருக்க வேண்டும். பணிவு மனிதனின் வாழ்வை உயர்த்தும். - திருமுருகக் கிருபானந்த வாரியார்


அட அப்படியா ..!


  • நதிகளே இல்லாத நாடு - சவூதி அரேபியா.
  • காகங்கள் இல்லாத நாடு - நியூஸிலாந்து.
  • கொசுக்கள் இல்லாத நாடு -பிரான்ஸ்.
  • திரையரங்குகளே இல்லாத நாடு -பூட்டான்.
  • பிரதமரும் மந்திரிகளும் இல்லாத நாடு -சுவிட்ஸர்லாந்து.
  • வருமான வரி விதிப்பு இல்லாத நாடு -குவைத்.
  • எழுதப் படிக்கத் தெரியாத முகலாய மன்னர் -அக்பர்.
  • ஆங்கிலம் தெரியாத இங்கிலாந்து மன்னர் -முதலாம் ஜார்ஜ்.
  • குதிக்கத் தெரியாத மிருகம் -யானை.
  • கண்களிருந்தும் பார்வை இல்லாத விலங்கு -வவ்வால்.
  • மீன்கள் இல்லாத நதி -ஜோர்டான்
  • ரயில்கள் இல்லாத நாடு - ஐஸ்லாந்து
  • தேசியக்கொடி இல்லாத நாடு - மாசிடோனியா
  • கடலில் கலக்காத நதி - யமுனை
  • எலும்புக் கூடு இல்லாத விலங்கு -ஜெல்லி மீன்.
  • பாலூட்டிகளில் நீந்தத் தெரியாத இரு விலங்குகள் -ஒட்டகம், பன்றி.
  • நீர் குடிக்காத விலங்கு - எலி, கங்காரு.
  • கூடு கட்டாத பறவை -குயில்.
  • பாம்புகள் இல்லாத இடம் - ஹவாய் தீவு
  • விதை இல்லாத பழம் -அன்னாசி.