மாதமிருமுறை 01 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது...

இன்றைய சொற்பொழிவு...

"நமக்கு எல்லாம் தெரிந்திருக்கிறது. மற்றவருக்கு என்ன தெரியும்?" என்று நினைத்துக் கொண்டு தருக்குற்று இருக்கக் கூடாது. கற்றது கைமண்ணளவு. கல்லாதது உலகளவு. எல்லாம் தெரிந்தவர்களும் உலகில் இல்லை. எதுவுமே தெரியாதவர்களும் உலகில் இல்லை. ஆதலால் அடக்கமாகவும் பணிவாகவும் இருக்க வேண்டும். பணிவு மனிதனின் வாழ்வை உயர்த்தும். - திருமுருகக் கிருபானந்த வாரியார்


எது என்று உங்களுக்குத் தெரியுமா?


  • " உலகின் புனித பூமி" என்று அழைக்கப்படுவது - பாலஸ்தீனம்
  • " மரகதத்தீவு" என்று அழைக்கப்படுவது - அயர்லாந்து.
  • " கங்காருபூமி" என்று அழைக்கப்படுவது -ஆஸ்திரேலியா
  • " வெள்ளை யானை பூமி" என்று அழைக்கப்படுவது தாய்லாந்து.
  • " உதயசூரியனின் பூமி " என்று அழைக்கப்படுவது ஜப்பான்.
  • " நைல் நதியின் நன்கொடை" என்று அழைக்கப்படுவது எகிப்து.
  • " அல்லி மலர்களின் பூமி" என்று அழைக்கப்படுவது கனடா.
  • " கேக்குகளின் பூமி" என்று அழைக்கப்படுவது ஸ்காட்லாந்து.
  • " ஹெர்ரிங் குளம்" என்று அழைக்கப்படுவது அட்லாண்டிக் கடல்
  • " தங்கப் பகோடாக்களின் பூமி" என்று அழைக்கப்படுவது மியான்மர்.
  • " ஆயிரம் ஏரிகளின் பூமி" என்று அழைக்கப்படுவது பின்லாந்து.
  • " நள்ளிரவு சூரியனின் பூமி" என்று அழைக்கப்படுவது நார்வே
  • " இலவங்கத்தீவு" என்று அழைக்கப்படுவது மடகாஸ்கர்.
  • " ஐரோப்பாவின் நோயாளி" என்று அழைக்கப்படுவது துருக்கி.
  • " ஐரோப்ப பார்வையாளர் மேடை" என்று அழைக்கப்படுவது பெல்ஜியம்.
  • " வெள்ளையனின் கல்லறை" என்று அழைக்கப்படுவது கினி கடற்கரை.
  • "சர்க்கரைகிண்ணம்"என்று அழைக்கப்படுவது கியூபா.