மாதமிருமுறை 01 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது...

இன்றைய சொற்பொழிவு...

"நமக்கு எல்லாம் தெரிந்திருக்கிறது. மற்றவருக்கு என்ன தெரியும்?" என்று நினைத்துக் கொண்டு தருக்குற்று இருக்கக் கூடாது. கற்றது கைமண்ணளவு. கல்லாதது உலகளவு. எல்லாம் தெரிந்தவர்களும் உலகில் இல்லை. எதுவுமே தெரியாதவர்களும் உலகில் இல்லை. ஆதலால் அடக்கமாகவும் பணிவாகவும் இருக்க வேண்டும். பணிவு மனிதனின் வாழ்வை உயர்த்தும். - திருமுருகக் கிருபானந்த வாரியார்


நேரத்தின் மதிப்பு தெரிய வேண்டுமா?


  • பத்து வருடங்களின் மதிப்பை உணர்ந்து கொள்ள, பத்து வருடங்கள் ஒன்றாய் வாழ்ந்து விவாகரத்துக்குள்ளான தம்பதிகளிடம் கேளுங்கள்.

  • நான்கு வருடங்களின் மதிப்பை உணர்ந்து கொள்ள, நான்கு வருடங்கள் காதலித்து விட்டு, தற்போது பிரிந்திருக்கும் இருவரிடம் கேளுங்கள்.


  • ஒரு வருடத்தின் மதிப்பை உணர்ந்து கொள்ள, ஒரு வருட படிப்பின் பின்னர், இறுதிப் பரீட்சையில் தோல்வியடந்த ஒரு மாணவனிடம் கேளுங்கள்.

  • ஒன்பது மாதங்களின் மதிப்பை உணர்ந்து கொள்ள, முழு வளர்ச்சியின் பின்னர், பிரசவத்தில் இறந்து பிறந்த குழந்தையைப் பெற்ற தாயிடம் கேளுங்கள்.

  • ஒரு மாதத்தின் மதிப்பை உணர்ந்து கொள்ள, ஒருமாத கர்ப்பத்தின் பின்னர், கருச்சிதைவு நடந்த ஒரு தாயிடம் கேளுங்கள்.

  • ஒரு கிழமையின் மதிப்பை உணர்ந்து கொள்ள, வார பத்திரிகையின் பதிப்பாசிரியரைக் கேளுங்கள்.

  • ஒரு மணித்தியாலத்தின் மதிப்பை உணர்ந்து கொள்ள, சந்திப்பதற்கு காத்திருந்து சந்திக்க முடியாமல் போன காதலர்களைக் கேளுங்கள்.

  • ஒரு நிமிடத்தின் மதிப்பை உணர்ந்து கொள்ள, ஒரு நிமிட நேரத்தில் பஸ்ஸையோ, ரயிலையோ, விமானத்தையோ தவற விட்டு விட்ட நபரைக் கேளுங்கள்.

  • ஒரு செக்கனின் மதிப்பை உணர்ந்து கொள்ள, ஒரு விபத்திலிருந்து நிமிட நேரத்தில் உயிர் பிழைத்த நபரைக் கேளுங்கள்.

  • ஒரு மில்லி செக்கனின் மதிப்பை உணர்ந்து கொள்ள, ஒலிம்பிக்ஸில் வெள்ளிப் பதக்கம் பெற்ற ஒரு நபரைக் கேளுங்கள்.

நேரம் யாருக்காகவும், எதற்காகவும் காத்திருப்பதில்லை. உங்களுக்கு கிடைத்திருக்கும் ஒவ்வொரு கணத்தையும் பொக்கிஷமாய் பாருங்கள். உங்களுக்கு மிகப் பிடித்தவர்களுடன் அந்த நேரத்தை செலவு செய்யும்போது, உங்களது நேரம் மேலும் பெறுமதி மிக்கதாயிருக்கும்.