மாதமிருமுறை 01 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது...

இன்றைய சொற்பொழிவு...

"நமக்கு எல்லாம் தெரிந்திருக்கிறது. மற்றவருக்கு என்ன தெரியும்?" என்று நினைத்துக் கொண்டு தருக்குற்று இருக்கக் கூடாது. கற்றது கைமண்ணளவு. கல்லாதது உலகளவு. எல்லாம் தெரிந்தவர்களும் உலகில் இல்லை. எதுவுமே தெரியாதவர்களும் உலகில் இல்லை. ஆதலால் அடக்கமாகவும் பணிவாகவும் இருக்க வேண்டும். பணிவு மனிதனின் வாழ்வை உயர்த்தும். - திருமுருகக் கிருபானந்த வாரியார்

கருணைக் கிழங்கு லேகியம்




தேவையான பொருட்கள்:
  • கருணைக் கிழங்கு- 250 கிராம் (நன்றாக வாடி இருக்க வேண்டும்.)
  • கருப்பட்டி- 250 கிராம்.
  • நல்லெண்ணெய்- 100 மி.லி.
  • ஏலக்காய்- 5 எண்ணம்.
செய்முறை:

1. கருணைக் கிழங்கைத் தோலுரித்து கழுவி தண்ணீர் போக உலர வைத்து, பொடிதாகச் சீவி தண்ணீர் சேர்க்காமல் அரைத்து வைக்கவும்.

2. கருப்பட்டியில் ஒரு 100 மி.லி தண்ணீர் விட்டு காய்ச்சி, கல்,தூசி இல்லாமல் வடிகட்டி வைக்கவும்.

3. வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அரைத்த கருணைக் கிழங்கை போட்டு சிறிது தண்ணீர் சேர்த்துக் கிளறி விடவும். 

4. அதனுடன் கருப்பட்டிப் பாகையும் சேர்த்துக் கெட்டியாகும் வரை கிளறவும். 

5. எண்ணெய் விடும் பக்குவம் வந்த பிறகு ஏலப்பொடியைச் சேர்த்துக் கிளறி இறக்கவும். 

இந்தக் கருணைக் கிழங்கு லேகியம் மூல நோயுடையவர்களுக்கு சிறந்த மருந்தாகும். மலச்சிக்கல் உடையவர்கள் இந்த லேகியம் சாப்பிட்டால் அந்த குறை தீரும். தினசரி காலை, மாலை இருவேளைகளில் இதைச் சாப்பிடலாம்.