பூனைக்குப் பயப்படும் மாவீரன்
- மனிதர்களாகிய நாம் 60 வயதை கடக்கும் பொழுது, நமது ருசி அறியும் நாக்கின் சுவை மொட்டுகளின் 40 சதவிகிதப் பகுதி அழிந்து போய்விடும்.
- 1844 ஆம் ஆண்டு முதன் முறையாக தந்தி மூலம் செய்தி அனுப்பப்பட்டது.
- குண்டூசி எகிப்து நாட்டவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.
- சுப்ரீம் கோர்ட் பெஞ்ச்சில் இடம் பெற்ற முதல் பெண் நீதிபதி பாத்திமா பீவி.
- மூளையில் வலது பக்கம் அதிக சக்தியை பெற்றிருப்பதால் சில பேருக்கு மட்டும் இடது கைப்பழக்கம் இயற்கையாக ஏற்படுகிறது.
- வாகனங்களில் பதிவு எண் முறையை முதன் முறையாக அறிமுகப்படுத்திய நாடு பிரான்ஸ்.
- நெப்போலியன் குதிரைச் சவாரி செய்தவாறே தூங்குவதில் வல்லவர். மேலும், மாவீரன் என்று புகழ்பெற்ற அவனுக்குப் பூனையைக் கண்டால் ஒரே பயம்.
- பெங்களூர் நகர் கெம்பே கௌடாவினால் 1537 -ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது . அங்கே தான் 1905 ல் முதல் மின்சார பல்பு எரிந்தது.
- டால்ஸ்டாய் 67 வயதில் மிதிவண்டி ஓட்டக் கற்றுக் கொண்டார்.
- டாக்டர் ஆம்ரூஸ் பாரே என்பவர்தான் அறுவை சிகிச்சையில் தையல் முறையைக் கண்டுபிடித்தவர்.
- குழந்தையின் கையில் ரேகைகள் 3-வது மாதத்திலிருந்துதான் உருவாகின்றன.
- மனிதன் உடம்பில் உள்ள நரம்புகளை ஒட்டு மொத்தமாக ஒரே நீளத்தில் நீட்டினால் அது 45 மைல் நீளத்திற்கு இருக்கும்.
- குளிர்ந்த காற்றும் வெப்பக் காற்றும் சந்திப்பதால் புயல்கள் உருவாகின்றன.
- இடி மின்னல் நாடு என்று பூடான் நாட்டை குறிப்பிடுகின்றனர்.
- "ஜெய்ஹிந்த்" என்ற வார்த்தையை முதன் முதலில் பயன்படுத்தியவர் தியாகி செண்பகராமன்.
- உலகில் தலைமுடி ஏற்றுமதியில் முன்னனியில் உள்ள நாடு சீனாதான்..
- மிகவும் லேசான உலோகம் லித்தியம் எனும் உலோகம்தான்.
- 1804 ஆம் ஆண்டில்தான் காகிதம் தயாரிக்கும் இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டது.
- மிக அதிக நீள சாலைகள் உள்ள நாடு பெல்ஜியம்.
- உலகின் மிகச்சிறிய குடியரசு நாடு நெளரு குடியரசு.