மாதமிருமுறை 01 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது...

இன்றைய சொற்பொழிவு...

"நமக்கு எல்லாம் தெரிந்திருக்கிறது. மற்றவருக்கு என்ன தெரியும்?" என்று நினைத்துக் கொண்டு தருக்குற்று இருக்கக் கூடாது. கற்றது கைமண்ணளவு. கல்லாதது உலகளவு. எல்லாம் தெரிந்தவர்களும் உலகில் இல்லை. எதுவுமே தெரியாதவர்களும் உலகில் இல்லை. ஆதலால் அடக்கமாகவும் பணிவாகவும் இருக்க வேண்டும். பணிவு மனிதனின் வாழ்வை உயர்த்தும். - திருமுருகக் கிருபானந்த வாரியார்


பூரண ஆயுள் என்றால் எவ்வளவு?


  • ஈரான், ஈராக் நாடுகளின் பழைய பெயர்கள் முறையே பெர்ஷியா, மெஸபடோமியா.

  • இருட்டைப் பார்த்து பயப்படுவதை டாக்டர்கள் அக்ளூவோபோபியா (achluophobia) என்றுசொல்வார்கள்.

  • முதன் முதலில் கேள்விக் குறியைப் பயன்படுத்திய மொழி இலத்தின் மொழிதான்.

  • உலகில் மிக நீளமான பாலம் சைனாவில் உள்ளது. இது 43.4 கி.மீ நீளம் கொண்டது.

  • உலகிலேயே மிக நீளமான நதி நைல் நதி. இது 7088 கி.மீ தொலைவு கொண்டது.

  • மீன் தன் வாழ்நாள் இறுதி வரை வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்கும்.

  • லினஸ் பாலிங் (Linus Pauling) என்பவர் வேதியியலுக்கான நோபல் பரிசை 1954 ஆம் ஆண்டிலும், சமாதானத்திற்கான நோபல் பரிசை 1964 ஆம் ஆண்டிலும் பெற்றார்.  

  • அட்லாண்டிக் பகுதியில் ஆண்டிற்கு ஒரு முறைதான் சூரியன் உதயமாகிறது.

  • அமெரிக்க ஜனாதிபதிகளில் 15 வது ஜனதிபதியான ஜேம்ஸ் பக்னான் (James Buchanon) என்பவர் திருமணம் செய்து கொள்ளாமல் பிரம்மச்சாரியாக வாழ்ந்தவர்.

  • மகாத்மதா காந்தி இந்தியாவில் மட்டுமல்ல தென்னாபிரிக்காவிலும் சிறைத் தண்டனை அனுபவித்துள்ளார்.

  • பாப்புவா நியூ கினியா (Papua New Guinea) எனும் நாட்டில் அரசு மொழியாக ஆங்கிலம் பயன்படுத்தப்பட்டாலும் இங்கு 715க்கும் அதிகமான மொழிகள் பேச்சு வழக்கத்தில் உள்ளன.

  • கைரேகையை வைத்து குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் முறையைக் கண்டறிந்தவர் எட்வர்ட் ஹென்றி

  • மனிதனின் கைரேகையைப் போலவே நாக்கில் உள்ள வரிகளும் ஒவ்வொருவருக்கும் வேறுபடும்.

  • ஐ.நா- வின் அலுவலக மொழிகளான சீனம், ஆங்கிலம், ருசிய, பிரன்ச், ஸ்பானிஷ் ஆகியவற்றுடன்தற்போது அரபு, ஹிந்தி மொழிகளும் சேர்ந்துள்ளன.

  • பூரண ஆயுள் என்பது 120 வருடங்கள் ஆரோக்கியமாக வாழ்வது.

  • ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகளைக் குறிக்கும்.