மாதமிருமுறை 01 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது...

இன்றைய சொற்பொழிவு...

"நமக்கு எல்லாம் தெரிந்திருக்கிறது. மற்றவருக்கு என்ன தெரியும்?" என்று நினைத்துக் கொண்டு தருக்குற்று இருக்கக் கூடாது. கற்றது கைமண்ணளவு. கல்லாதது உலகளவு. எல்லாம் தெரிந்தவர்களும் உலகில் இல்லை. எதுவுமே தெரியாதவர்களும் உலகில் இல்லை. ஆதலால் அடக்கமாகவும் பணிவாகவும் இருக்க வேண்டும். பணிவு மனிதனின் வாழ்வை உயர்த்தும். - திருமுருகக் கிருபானந்த வாரியார்

தானம் செய்வதால் வரும் பலன்கள்...


நாம் தானம் தரும் ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு பலன் கிடைக்கும் என்று இந்து மத புராணங்களில் தெரிவிக்கப் பட்டுள்ளது. அவற்றில் முக்கியமான சில மட்டும் இங்கே...

அன்ன தானம் - தரித்திரமும் கடனும் நீங்கும்.

வஸ்திர தானம் -ஆயுளை விருத்தி செய்யும்.

பூமி தானம் - பிரமலோகத்தையும், ஈஸ்வர தரிசனத்தையும் கொடுக்கும்.

கோதுமை தானம் - ரிஷிக்கடன், தேவகடன், பிதுர்கடன் ஆகியவற்றை அகற்றும்.

தீப தானம் - கண்பார்வை தீர்க்கமாகும்.

நெய், எண்ணை தானம் - நோய் தீர்க்கும்.

தங்கம் தானம் - குடும்ப தோஷம் நீங்கும்.

வெள்ளி தானம் - மனக்கவலை நீங்கும்.

தேன் தானம் - புத்திர பாக்கியம் உண்டாகும்.

நெல்லிக்கனி தானம் - ஞானம் உண்டாகும்.

அரிசி தானம் - பாவங்களைப் போக்கும்.

பால் தானம் - துக்கம் நீங்கும்.

தயிர் தானம் - இந்திரிய விருத்தி ஏற்படும்.

தேங்காய் தானம் - நினைத்த காரியம் நிறைவேறும்.

பழங்கள் தானம் - புத்தியும் சித்தியும் கிட்டும்.