மாதமிருமுறை 01 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது...

இன்றைய சொற்பொழிவு...

"நமக்கு எல்லாம் தெரிந்திருக்கிறது. மற்றவருக்கு என்ன தெரியும்?" என்று நினைத்துக் கொண்டு தருக்குற்று இருக்கக் கூடாது. கற்றது கைமண்ணளவு. கல்லாதது உலகளவு. எல்லாம் தெரிந்தவர்களும் உலகில் இல்லை. எதுவுமே தெரியாதவர்களும் உலகில் இல்லை. ஆதலால் அடக்கமாகவும் பணிவாகவும் இருக்க வேண்டும். பணிவு மனிதனின் வாழ்வை உயர்த்தும். - திருமுருகக் கிருபானந்த வாரியார்


இடதுகைப் பழக்கம் ஏன்?



  • பாதிரி எனும் மலர் நடுப்பகலில் மலரும் இயல்புடையது.

  • உருது எனும் மொழி வடமிருந்து இடமாக எழுதப்படும் மொழி.

  • யோகா எனும் சமஸ்கிருதச் சொல்லுக்கு ஒழுக்கம் என்று பொருள்.

  • பிக்கா போலன்சியா எனும் நோய் போலந்து நாட்டைத் தவிர வேறு எங்குமில்லை.

  • பெல்ஜியத்தில்தான் மிக நீளமான சாலைகள் அதிகம் உள்ளன.

  • போலந்து சாடாரிட்டி எனும் தொழிற்சங்கம்தான் உலகின் மிகப்பெரிய தொழிற்சங்கம்.

  • தலைமுடி ஏற்றுமதி செய்வதில் சீனா முதலிடம் வகிக்கிறது.

  • மூளையில் வலது பக்கம் அதிக சக்தியை பெற்றிருப்பவர்கள் இடது கைப் பழக்கமுடையவர்களாக இருக்கின்றனர்.

  • குளிர்ந்த காற்றும் வெப்பக் காற்றும் சந்திப்பதால் இயற்கையான புயல் உருவாகிறது.

  • கொய்ணா எனும் மருந்து மலேரியா நோயைக் குணப்படுத்துகிறது.

  • நெளரு குடியரசுதான் உலகின் மிகச்சிறிய குடியரசு நாடாகும்.

  • இந்திய ரிசர்வ் வங்கி 1935ல் ஆரம்பிக்கப்பட்டது.

  • கடல் நீரில் 2.30 சதவிகிதம் அளவு உப்புள்ளது.

  • டாக்டர் ஆம்ரூஸ் பாரே என்பவர்தான் அறுவைசிகிச்சையில் தையல் முறையை கண்டுபிடித்தார்.

  • இடி மின்னல் நாடு என்று பூட்டான் நாட்டைக் குறிப்பிடுகின்றனர்.

  • வெளிச்சக்கதிர்கள் 1ஆண்டு காலத்தில் பயணப்படும் வேகத்தைக் குறிப்பது ஒளி ஆண்டு எனப்படும்.

  • சிகாகோவின் புனைப்பெயர் புயலடிக்கும் நகரம்.

  • தக்காண பீடபூமி முக்கோண வடிவம் உடையது.