மாதமிருமுறை 01 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது...

இன்றைய சொற்பொழிவு...

"நமக்கு எல்லாம் தெரிந்திருக்கிறது. மற்றவருக்கு என்ன தெரியும்?" என்று நினைத்துக் கொண்டு தருக்குற்று இருக்கக் கூடாது. கற்றது கைமண்ணளவு. கல்லாதது உலகளவு. எல்லாம் தெரிந்தவர்களும் உலகில் இல்லை. எதுவுமே தெரியாதவர்களும் உலகில் இல்லை. ஆதலால் அடக்கமாகவும் பணிவாகவும் இருக்க வேண்டும். பணிவு மனிதனின் வாழ்வை உயர்த்தும். - திருமுருகக் கிருபானந்த வாரியார்

தமிழ் அகராதிகள்.


வீரமா முனிவர் அளித்த முதல் தமிழ் அகராதிக்குப் பிறகு வந்த பல தமிழகராதிகளும் அவற்றை அளித்த ஆசிரியர்களும் அவை வெளியான ஆண்டுகளும் இங்கே தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.

1. சதுரகராதி - வீரமா முனிவர் - 1732.


2. பெப்ரியசு அகராதி - பெப்ரியசு - 1779.


3. ராட்லர் தமிழ் அகராதி - பாகம் 1 - ராட்லர் - 1834.


4. ராடர் தமிழ் அகராதி- பாகம் 2 - ராட்லர் - 1837.


5. ராட்லர் தமிழ் அகராதி-பாகம் 3 - ராட்லர் - 1839.


6. ராட்லர் தமிழ் அகராதி- பாகம் 4 - ராட்லர் - 1841.


7. மானிப்பாய் அகராதி - யாழ்ப்பாணம் சந்திரசேகர பண்டிதர் மற்றும்
சரவணமுத்துப் பிள்ளை - 1834.


8. சொற்பொருள் விளக்கம் - களத்தூர் வேதகிரி முதலியார் - 1850.


9. போப்புத் தமிழ் அகராதி - ஜி.யு.போப் - 1869.


10. அகராதிச் சுருக்கம் - விஜயரங்க முதலியார் - 1883.


11. பேரகராதி - காஞ்சிபுரம் இராமசாமி நாயுடு - 1893.


12. தரங்கம்பாடி அகராதி - பெரியசு அகராதியின் விரிவு - 1897.


13. தமிழ்ப் பேரகராதி - யாழ்ப்பாணம் கதிரைவேற் பிள்ளை - 1899.


14. தமிழ்ப் பேரகராதி - யாழ்ப்பாணம் கதிரைவேற் பிள்ளை - 1901.


15. தமிழ்ச் சொல்லகராதி - யாழ்ப்பாணம் கதிரைவேற் பிள்ளை - 1904.


16. சிறப்புப் பெயர் அகராதி - ஈக்காடு இரத்தினவேல் முதலியார் - 1908.


17. இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் அகராதி - பி.ஆர். இராமநாதன் - 1909.



18. அபிதானசிந்தாமணி - ஆ.சிங்காரவேலு முதலியார் - 1910.


19. தமிழ்ச் சொல் அகராதி, முதல் தொகுதி - யாழ்ப்பாணம் கதிரைவேற் பிள்ளை - 1910.


20. தமிழ்ச் சொல் அகராதி, இரண்டாம் தொகுதி - யாழ்ப்பாணம் கதிரைவேற் பிள்ளை - 1912.


21. தமிழ்ச் சொல் அகராதி, மூன்றாம் தொகுதி:- யாழ்ப்பாணம் கதிரைவேற் பிள்ளை - 1923.


22. தமிழ் மொழி அகராதி - காஞ்சி நாகலிங்க முனிவர் - 1911.


23. இலக்கியச் சொல் அகராதி - கன்னாகம் அ. குமாரசாமி பிள்ளை - 1914-.


24. மாணவர் தமிழ் அகராதி - எஸ். அனவரத விநாயகம் பிள்ளை - 1921.


25. சொற்பொருள் விளக்கம் - சு.சுப்பிரமணிய சாஸ்திரி - 1924-.


26. தற்காலத் தமிழ்ச் சொல் அகராதி - ச. பவானந்தம் பிள்ளை - 1925.


27. இளைஞர் தமிழ்க் கையகராதி - மே.வீ. வேணுகோபாலபிள்ளை - 1928
.
28. ஜுபிலி தமிழ் அகராதி - எஸ். சங்கரலிங்கமுதலியார் - 1935.


29. ஆனந்தவிகடன் அகராதி - ஆனந்த விகடன் பத்திரிக்கை ஆசிரியர் குழு - 1935.


30. நவீன தமிழ் அகராதி - சி.கிருஷ்ணசாமி பிள்ளை - 1935.


31. மதுரைத் தமிழ்ப் பேரகராதி - மதுரை இ.மா.கோபாலகிருஷ்ணக் கோனார் மற்றும் பண்டிதர் பார் - 1937.


32. சொற்பிறப்பு ஒப்பியல் தமிழ் அகராதி - சுவாமி ஞானப் பிரகாசம் - 1938.


33. தமிழறிஞர் அகராதி - சி. கிருஷ்ணசாமிப் பிள்ளை - 1839.


34. தமிழ் அமிழ்த அகராதி - சி.கிருஷ்ணசாமிப் பிள்ளை - 1939.


35. விக்டோரியா தமிழ் அகராதி - எஸ். குப்புஸ்வாமி- 1939.


36. தமிழ் லெக்ஸஸிகன் - சென்னைப் பல்கலைகழகம் - 1939.


37. கழகத் தமிழ் அகராதி - சேலை சகாதேவ முதலியார் மற்றும் காழி
சிவகண்ணுச் சாமி பிள்ளை - 1940.


38. செந்தமிழ் அகராதி - ந.சி. கந்தையாப் பிள்ளை - 1950.


39. கமபர் தமிழ் அகராதி - வே. இராமச் சந்திர சர்மா - 1951.


40. சுருக்கத் தமிழ் அகராதி - கலைமகள் பத்திரிக்கை - 1955.


41. கோனார் தமிழ்க் கையகராதி - ஐயன் பெருமாள்க் கோனார் - 1955.


42. தமிழ் இலக்கிய அகராதி - பாலூர் து. கண்ணப்ப முதலியார் - 1957.


43. கழகத் தமிழ் அகராதி - கழகப் புலவர் (சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்) - 1964-.


44. லிஃப்கோ தமிழ் அகராதி - லிஃப்கோ புத்தக நிறுவனம் - 1969..


45. தமிழ்ச் சுருக்கெழுத்து அகராதி - அனந்தநாராயணன் -1980.


46. தமிழ்-அகர முதலி - மு சண்முகம் பிள்ளை - 1984-.


47. செந்தமிழ் சொற்பியல் பேரகர முதலி - தேவநேயப்பாவாணர் - 1984.


48. பழந்தமிழ் சொல் அகராதி - (5-தொகுதிகள்) - புலவர் த கோவேந்தன் -1985.


49. திருமகள் கையகராதி - புலவர் த. கோவிந்தன் மற்றும் கீதா - 1995.


50. மலேசியச் செந்தமிழ் அகராதி - டாக்டர் ஜி.பி. இலாசரஸ் - 1997.


51. வசந்தா தமிழ் அகராதி - புலவரேறு அரிமதி தென்னகன் - 2000.


52. நர்மதா தமிழ் அகராதி - நர்மதா பதிப்பகத்தின் புலவர் குழு -2003.