மாதமிருமுறை 01 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது...

இன்றைய சொற்பொழிவு...

"நமக்கு எல்லாம் தெரிந்திருக்கிறது. மற்றவருக்கு என்ன தெரியும்?" என்று நினைத்துக் கொண்டு தருக்குற்று இருக்கக் கூடாது. கற்றது கைமண்ணளவு. கல்லாதது உலகளவு. எல்லாம் தெரிந்தவர்களும் உலகில் இல்லை. எதுவுமே தெரியாதவர்களும் உலகில் இல்லை. ஆதலால் அடக்கமாகவும் பணிவாகவும் இருக்க வேண்டும். பணிவு மனிதனின் வாழ்வை உயர்த்தும். - திருமுருகக் கிருபானந்த வாரியார்

தீபாவளி தகவல்கள்.


தீபாவளிப் படையல்கள்
தீபாவளியன்று கடவுளை வணங்குவதற்காகப் படைக்கும் பொருட்களில் எண்ணெய், புத்தாடை, சந்தனம், குங்குமம், பூக்கள், சிறிது இனிப்பு கலந்த மருந்து பதார்த்தங்கள், தண்ணீர் ஆகியவை கட்டாயம் இருக்க வேண்டும்.

இதில் எண்ணெய்யில் மகாலட்சுமி, புத்தாடையில் மகாவிஷ்ணு, சந்தனத்தில் பூமாதேவி, குங்குமத்தில் அம்பிகை, இனிப்பான மருந்தில் அமிர்தம், தண்ணீரில் கங்காதேவி ஆகியோ இருப்பதாக ஒரு நம்பிக்கை.

முதல் தீபாவளி
தமிழ்நாட்டில் தீபாவளி முதன் முதலாக மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்கள் காலத்தில்தான் கொண்டாடப்பட்டது.

தீபாவளி பட்டாசு
டபாஸ் எனும் வடமொழிச் சொல்லிலிருந்துதான் பட்டாசு என்ற பெயர் வந்தது. டபாஸ் என்ற வடமொழிச் சொல்லுக்கு "உரத்த ஒலி" என்று பொருள்.

வடமாநிலத் தீபாவளி
தமிழ்நாட்டில் தீபாவளி ஒருநாள் மட்டும் கொண்டாடப்படுகிறது. ஆனால் வடமாநிலங்களில் ஐந்து நாட்கள் கொண்டாடுகிறார்கள். இந்நாட்களில் லட்சுமி பூஜை, நரக சதுர்த்தி, எமதர்ம வழிபாடு போன்ற விழாவையும் கொண்டாடுகின்றனர். இப்பண்டிகையின் போது திருமணமாகாத கன்னிப் பெண்கள் நீர்நிலைகளில் தீபம் ஏற்றி மிதக்க விடுகின்றனர். இப்படி செய்வதால் அவர்களுக்கு நல்ல வரண் அமையும் என்பதும், குடும்பத்தில் செல்வங்கள் பெருகும் என்பதும் நம்பிக்கை.

தீபாவளிக் கணக்கு
இராஜஸ்தான் மாநிலத்தில் தீபாவளியை தீபமாலிகா என்று அழைக்கின்றனர். இவர்கள் அமாவாசை என்றால் மாதம் முடிந்து விடுகிறது. அமாவாசையின் மறுநாள் புது மாதம் துவங்கி விடுகிறது என்று கணக்கு வைக்கின்றனர். இப்படி தீபாவளி அன்று வரும் அமாவாசை வருடம் முடிந்ததாகக் கணக்கு கொள்கின்றனர். இவர்களுக்கு தீபாவளிதான் ஆண்டுக் கணக்கு.