மாதமிருமுறை 01 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது...

இன்றைய சொற்பொழிவு...

"நமக்கு எல்லாம் தெரிந்திருக்கிறது. மற்றவருக்கு என்ன தெரியும்?" என்று நினைத்துக் கொண்டு தருக்குற்று இருக்கக் கூடாது. கற்றது கைமண்ணளவு. கல்லாதது உலகளவு. எல்லாம் தெரிந்தவர்களும் உலகில் இல்லை. எதுவுமே தெரியாதவர்களும் உலகில் இல்லை. ஆதலால் அடக்கமாகவும் பணிவாகவும் இருக்க வேண்டும். பணிவு மனிதனின் வாழ்வை உயர்த்தும். - திருமுருகக் கிருபானந்த வாரியார்

திருவெம்பாவை விரதம்...




திருவெம்பாவை விரதம்
திருவெம்பாவை விரதம்
மார்கழி மாதம் திருவெம்பாவைக்கு முந்திய பத்து நாட்கள் பெண்களால் கைக்கொள்ளப்படும் விரதம் இது. "பாவை நோன்பு" " கார்த் யாயனி விரதம் என்று அழைக்கப்படும் சிவ விரதமாகவும், வைணவ விரதமாகவும் இது போற்றப்படும். மணிவாசகர் திருவண்ணாமலையில் கன்னிப் பெண்கள் அதிகாலையில் எழுந்து ஒருவரையொருவர் துயிலெழுப்பி கூட்டமாகச் சென்று பொய்கையில் நீராடி இறைவன் புகழ்பாடி வழிபடுவதை திருவெம்பாவைப் பாடல்களில் குறிப்பிடுகின்றார். இதனைச் சங்க நூல்கள் "தைந்நீராடல்"என்றும் "அம்பா ஆடல்" என்றும் கூறுகின்றது.
வைணவப் பெண்களும் ஒருவரை ஒருவர் துயிலெழுப்பி நீர்த்துறையில் நீராடி கண்ணனைப்போல உருவம் செய்து கண்ணனே கணவனாக வரவேண்டுமென்று வேண்டி,
நெய், பால் உண்ணாது, மையிட்டெழுதாது, மலரிட்டு முடியாது தீய சொற்களைக் கூறாது ஐயமும் பிச்சையுமிட்டு இவ்விரதத்தை மார்கழி முப்பது நாட்களும் மேற்கொண்டனர் என்று "திருப்பாவை" கிருஸ்ண பாகவதத்திற்கு இயையக் கூறுகின்றது.
திருவெம்பாவையில் கன்னிப் பெண்கள் சிவனடியார்களே தமக்குக் கணவராக வரவேண்டுமென்றும் நாடுமலிய மழைபெய்ய வேண்டும் என்றும் விரும்புவதாகக் குறிப்பிடப்படுகின்றது.