மாதமிருமுறை 01 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது...

இன்றைய சொற்பொழிவு...

"நமக்கு எல்லாம் தெரிந்திருக்கிறது. மற்றவருக்கு என்ன தெரியும்?" என்று நினைத்துக் கொண்டு தருக்குற்று இருக்கக் கூடாது. கற்றது கைமண்ணளவு. கல்லாதது உலகளவு. எல்லாம் தெரிந்தவர்களும் உலகில் இல்லை. எதுவுமே தெரியாதவர்களும் உலகில் இல்லை. ஆதலால் அடக்கமாகவும் பணிவாகவும் இருக்க வேண்டும். பணிவு மனிதனின் வாழ்வை உயர்த்தும். - திருமுருகக் கிருபானந்த வாரியார்


ஒன்றோடு பூஜ்ஜியங்கள் சேரும் மதிப்பு தெரியுமா?


எண் ஒன்றுக்குப் பின் பூஜ்ஜியங்கள் சேரும் போது கிடைக்கும் மதிப்பை எப்படி அழைப்பது என்று உங்களுக்குத் தெரியுமா?

1 மற்றும் 5 பூஜ்ஜியங்கள்
- ஒரு இலட்சம் (இந்தியா)
- ஒரு நூறாயிரம் (அமெரிக்கா & பிரான்சு)
- ஒரு நூறாயிரம் (இங்கிலாந்து & ஐரோப்பிய நாடுகள்)

1 மற்றும் 6 பூஜ்ஜியங்கள்
- பத்து இலட்சம் (இந்தியா)
- மில்லியன் (அமெரிக்கா & பிரான்சு)
- மில்லியன் (இங்கிலாந்து & ஐரோப்பிய நாடுகள்)

1 மற்றும் 7 பூஜ்ஜியங்கள்
- ஒரு கோடி (இந்தியா)
- பத்து மில்லியன் (அமெரிக்கா & பிரான்சு)
- பத்து மில்லியன் (இங்கிலாந்து & ஐரோப்பிய நாடுகள்)

1 மற்றும் 8 பூஜ்ஜியங்கள்
- பத்து கோடி (இந்தியா)
- நூறு மில்லியன் (அமெரிக்கா & பிரான்சு)
- நூறு மில்லியன் (இங்கிலாந்து & ஐரோப்பிய நாடுகள்)

1 மற்றும் 9 பூஜ்ஜியங்கள்
- நூறு கோடி (இந்தியா)
- பில்லியன் (அமெரிக்கா & பிரான்சு)
- மில்லியர்டு (இங்கிலாந்து & ஐரோப்பிய நாடுகள்)

1 மற்றும் 12 பூஜ்ஜியங்கள்
- ------- (இந்தியா)
- டிரில்லியன் (அமெரிக்கா & பிரான்சு)
- பில்லியன் (இங்கிலாந்து & ஐரோப்பிய நாடுகள்)

1 மற்றும் 15 பூஜ்ஜியங்கள்
- ------- (இந்தியா)
- குவாட்ரில்லியன் (அமெரிக்கா & பிரான்சு)
- ஆயிரம் பில்லியன் (இங்கிலாந்து & ஐரோப்பிய நாடுகள்)

1 மற்றும் 18 பூஜ்ஜியங்கள்
- ------- (இந்தியா)
- குவின்டில்லியன் (அமெரிக்கா & பிரான்சு)
- டிரில்லியன் (இங்கிலாந்து & ஐரோப்பிய நாடுகள்)

1 மற்றும் 21 பூஜ்ஜியங்கள்
- ------- (இந்தியா)
- செக்ஸ்டில்லியன் (அமெரிக்கா & பிரான்சு)
- ஆயிரம் டிரில்லியன் (இங்கிலாந்து & ஐரோப்பிய நாடுகள்)

1 மற்றும் 24 பூஜ்ஜியங்கள்
- ------- (இந்தியா)
- செப்டில்லியன் (அமெரிக்கா & பிரான்சு)
- குவாட்ரில்லியன் (இங்கிலாந்து & ஐரோப்பிய நாடுகள்)

1 மற்றும் 27 பூஜ்ஜியங்கள்
- ------- (இந்தியா)
- ஆக்டில்லியன் (அமெரிக்கா & பிரான்சு)
- ஆயிரம் குவாட்ரில்லியன் (இங்கிலாந்து & ஐரோப்பிய நாடுகள்)

1 மற்றும் 30 பூஜ்ஜியங்கள்
- ------- (இந்தியா)
- நோனில்லியன் (அமெரிக்கா & பிரான்சு)
- குவிண்டில்லியன் (இங்கிலாந்து & ஐரோப்பிய நாடுகள்)

1 மற்றும் 33 பூஜ்ஜியங்கள்
- ------- (இந்தியா)
- டெசில்லியன் (அமெரிக்கா & பிரான்சு)
- ஆயிரம் குவிண்டில்லியன் (இங்கிலாந்து & ஐரோப்பிய நாடுகள்)