மாதமிருமுறை 01 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது...

இன்றைய சொற்பொழிவு...

"நமக்கு எல்லாம் தெரிந்திருக்கிறது. மற்றவருக்கு என்ன தெரியும்?" என்று நினைத்துக் கொண்டு தருக்குற்று இருக்கக் கூடாது. கற்றது கைமண்ணளவு. கல்லாதது உலகளவு. எல்லாம் தெரிந்தவர்களும் உலகில் இல்லை. எதுவுமே தெரியாதவர்களும் உலகில் இல்லை. ஆதலால் அடக்கமாகவும் பணிவாகவும் இருக்க வேண்டும். பணிவு மனிதனின் வாழ்வை உயர்த்தும். - திருமுருகக் கிருபானந்த வாரியார்


கட்டித் தழுவிக் கழுத்தைக் கடித்து...




ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது கைகூப்பி வணக்கம் செய்வதை இந்தியாவில் வழக்கமாகக் கொண்டுள்ளோம். இதை மற்ற நாடுகளில் எப்படி கடைப்பிடிக்கிறார்கள் தெரியுமா?

  • பர்மாவில் நண்பர்கள் சந்தித்தால் ஒருவரை ஒருவர் முத்தமிட்டுக் கொள்வார்கள்.

  • ஜப்பானில் முழந்தாளிட்டமர்ந்து வணங்குகிறார்கள்.

  • ஸ்பெயின் நாட்டில் விவசாயிகள் சந்தித்துக் கொள்ளும் போது தங்களிடமிருக்கும் ரொட்டித் துண்டுகளை ஒருவருக்கொருவர் காட்டிக் கொள்கிறார்கள்.

  • பிலிப்பைன்ஸ் தீவு மக்கள் இருவர் சந்திக்கும் போது காதுகளைப் பொத்திக் கொண்டு ஒரு காலை மேலே தூக்கி வணக்கம் செலுத்துகின்றனர்.

  • பிரான்ஸ் மக்கள் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவிக் கழுத்தைக் கடித்துக் கொள்வதையே தம் அன்பை வெளிப்படுத்தும் முறையாகக் கொண்டுள்ளனர்.

  • தாய்லாந்து மக்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது "ஸ்வஸ்தி " என்று கூறி நம்மைப் போல் கைகூப்பி வணக்கம் செலுத்துகின்றனர்.

  • மலேயா, டாஸ்மோனியா ஆகிய நாட்டில் வசிப்பவர்கள் முறையே உச்சி மோப்பது, மூக்கோடு மூக்கைத் தேய்ப்பது ஆகிய முறைகளில் வணக்கம் தெரிவிக்கின்றனர்.

  • திபெத்தியர்கள் நாக்கை நீட்டி விசிலடித்து வணக்கம் செய்கின்றனர்.

  • எகிப்தில் சந்தித்துக் கொள்பவர்கள் இன்று வெயில் எப்படி என்று கேட்டுக் கொள்கின்றனர்.

  • ஜெர்மனியில் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது நேற்று இரவு நன்றாகத் தூங்கினீர்களா? என்று கேட்கின்றனர்.

  • ஆங்கிலேயர்கள் சந்தித்துக் கொள்ளும் போது கடவுள் உம்மைக் காப்பாராக என்கின்றனர்.