மாதமிருமுறை 01 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது...

இன்றைய சொற்பொழிவு...

"நமக்கு எல்லாம் தெரிந்திருக்கிறது. மற்றவருக்கு என்ன தெரியும்?" என்று நினைத்துக் கொண்டு தருக்குற்று இருக்கக் கூடாது. கற்றது கைமண்ணளவு. கல்லாதது உலகளவு. எல்லாம் தெரிந்தவர்களும் உலகில் இல்லை. எதுவுமே தெரியாதவர்களும் உலகில் இல்லை. ஆதலால் அடக்கமாகவும் பணிவாகவும் இருக்க வேண்டும். பணிவு மனிதனின் வாழ்வை உயர்த்தும். - திருமுருகக் கிருபானந்த வாரியார்

மீன் ஊறுகாய்


தேவையான பொருட்கள்:
  • மீன் (முள் நீக்கியது) - 1கிலோ கிராம்
  • இஞ்சி - 125 கிராம்
  • பூண்டு - 125 கிராம்
  • கடுகு - 60 கிராம்
  • சர்க்கரை - 1 கோப்பை
  • வினிகர் - 400 கிராம்
  • மிளகாய் வற்றல் - 60 கிராம்
  • சீரகம் - 35 கிராம்
  • உப்பு - தேவையான அளவு
  • ந. எண்ணெய் - 500 கிராம்
  • மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
செய்முறை:

1. மீனை சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
2. உப்பு, மிளகாய்த்தூள் போன்றவை கலந்து மீன் துண்டுகளின் இருபுறமும் அதைத் தடவி ஊற வைக்கவும்.
3. வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாகவும் அதில் மீன் துண்டுகளைப் பொறித்தெடுக்கவும்.
4. இஞ்சி, பூண்டு, மிளகாய் வற்றல், சீரகம், கடுகு ஆகியவற்றை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
5. எண்ணெய்யைச் சூடாக்கி அரைத்த மசாலாவை நன்றாக வதக்கவும்.
6. மீன், வினிகர், சர்க்கரை ஆகியவற்றை அத்துடன் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வேகவிடவும்.

சுவையாக வைத்திருந்து சாப்பிட மீன் ஊறுகாய் தயார். .