மாதமிருமுறை 01 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது...

இன்றைய சொற்பொழிவு...

"நமக்கு எல்லாம் தெரிந்திருக்கிறது. மற்றவருக்கு என்ன தெரியும்?" என்று நினைத்துக் கொண்டு தருக்குற்று இருக்கக் கூடாது. கற்றது கைமண்ணளவு. கல்லாதது உலகளவு. எல்லாம் தெரிந்தவர்களும் உலகில் இல்லை. எதுவுமே தெரியாதவர்களும் உலகில் இல்லை. ஆதலால் அடக்கமாகவும் பணிவாகவும் இருக்க வேண்டும். பணிவு மனிதனின் வாழ்வை உயர்த்தும். - திருமுருகக் கிருபானந்த வாரியார்

ஊறுகாய் வகைகள்


எலுமிச்சை ஊறுகாய்

தேவையான பொருட்கள்:
  • எலுமிச்சம் பழம்- 10 எண்ணம்.
  • உப்பு- 100 கிராம்.
  • கடுகு, உளுந்து- தேவையான அளவு.
  • பொடித்த காயம், வெந்தயம்-1 தேக்கரண்டி.
  • நல்லெண்ணெய்- 6 மேஜைக் கரண்டி.
  • மிளகாய்த்தூள்- 1 மேஜைக் கரண்டி.
  • மஞ்சள் தூள்- 1 தேக்கரண்டி.
  • பச்சை மிளகாய்- 8 எண்ணம்.
செய்முறை:

1. எலுமிச்சம் பழத்தை எட்டு துண்டுகளாக நறுக்கி உப்பு, மஞ்சள் தூள் கலந்து நன்கு குலுக்கி சூரிய வெளிச்சத்தில் காய வைக்கவும்.
2. ஒரு வார காலத்தில் எலுமிச்சம் பழம் உப்பு, மஞ்சள் தூளில் நன்கு ஊறி விடும். 
3. வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து போட்டு மிளகாய் கருவேப்பிலை போடவும். 
4. அரை கப் தண்ணீர் ஊற்றி, மிளகாய்த்தூள், பெருங்காய, வெந்தயப் பொடி போட்டு நன்கு கொதிக்க விடவும்.
5. நன்கு கொதித்ததும் இறக்கி ஆறிய பின் எலுமிச்சம் பழ ஊறுகாயில் ஊற்றிக் கலக்கவும்.
 
தயிர் சாதம், புளிச்சாதம் போன்றவைகளுக்கு இந்த எலுமிச்சை ஊறுகாய் தொட்டுக் கொள்ள சுவையே தனிதான்.
 
=======================================================================