மாதமிருமுறை 01 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது...

இன்றைய சொற்பொழிவு...

"நமக்கு எல்லாம் தெரிந்திருக்கிறது. மற்றவருக்கு என்ன தெரியும்?" என்று நினைத்துக் கொண்டு தருக்குற்று இருக்கக் கூடாது. கற்றது கைமண்ணளவு. கல்லாதது உலகளவு. எல்லாம் தெரிந்தவர்களும் உலகில் இல்லை. எதுவுமே தெரியாதவர்களும் உலகில் இல்லை. ஆதலால் அடக்கமாகவும் பணிவாகவும் இருக்க வேண்டும். பணிவு மனிதனின் வாழ்வை உயர்த்தும். - திருமுருகக் கிருபானந்த வாரியார்


அட அப்படியா...?




  • மரங்கொத்திப் பறவை மரத்தை ஒரு நொடிக்கு 20 தடவைகள் கொத்தும்.

  • கடல் ஆமை ஒரே சமயத்தில் 200 முட்டைகளிடும்.

  • தீக்கோழிகள் சுமார் 70 வருடம் வரை உயிர் வாழும், சுமார் 50 வருடங்கள் வரை முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும்.

  • பையா என்ற பறவை மனிதனைப் போல விசிலடிக்கும்.

  • Grizzly Bear, என்கிற கரடியினம் குதிரைகளுக்கு இணையான வேகத்தில் ஓடும் திறனுடையது.

  • ஒரு தேனீ 75,000 கிலோ மீட்டருக்கு மேல் பயணம் செய்து 500 கிராம் அள்வுள்ள தேனைச் சேகரிக்கிறது.

  • அன்னப்பறவையின் உடலில் 25,000 இறகுகள் வரை இருக்கும்.

  • தெள்ளுப் பூச்சி (Flea) அதன் உடலின் நீளத்தைப் போல் சுமார் 350 மடங்கு நீளத்தை தாண்டும். அதாவது ஒருமனிதன் ஒரு கால்பந்து மைதானத்தை ஒரே நேரத்தில் தாண்டுவதற்கு சமம்.

  • நிலத்தில் பறக்காத பென்குயின் பறவைக்கு நீருக்குள் பறக்கும் சக்தி உண்டு.

  • தேனீக்கள் இனம் 40 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே பூமியில் தோன்றி விட்டன.

  • Great horned owl, இந்த ஆந்தையின் உடலில் உள்ள இறகுகளை எடுத்து விட்டு அதன் எடையைக்கணக்கிட்டால் அதன் இறகுகளை விட எடை குறைவாகத்தான் இருக்கும்.

  • விலங்கினகளில் Cat Fish க்குதான் அதிக சுவை மொட்டுகள் அதாவது
    27, 000 சுவை மொட்டுகள் உண்டு.

  • அறிவற்ற பறவை என்று எல்லோரும் நினைக்கும் வாத்துக்கள் . உலகத்தில் உள்ள பறவை இனங்களின் அறிவு வளர்ச்சியுடன் ஒப்பிடும் பொழுது முதல் நூறு இடங்களிற்குள் இருக்கிறது 

  • வாத்து காலை நேரத்தில் தான் முட்டைகள் இடும்.

  • உலகத்தில் வாழும் பூச்சி இனங்களில் மிகவும் வினோதமான பூச்சி கரப்பான் பூச்சிதான். தலையே இல்லாமல் 9 நாட்கள் உயிரோடு வாழும் சக்தி கொண்டவை கரப்பான் பூச்சிகள். அதற்கு மேலும் அதனால் வாழமுடியும். ஆனால் எதுவுமே சாப்பிட முடியாததால் பசியால் வாடியே உயிர்த் துறக்கிறதாம்!

  • உலகத்தில் உள்ள விலங்குகளில் தாண்டி குதிக்க முடியாத மிருகம் யானைதான்.

  • புறா ஓய்வெடுக்காமல் சுமார் ஆயிரம் கி.மீ. வரை பறக்கும் திறன் படைத்தது.