மாதமிருமுறை 01 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது...

இன்றைய சொற்பொழிவு...

"நமக்கு எல்லாம் தெரிந்திருக்கிறது. மற்றவருக்கு என்ன தெரியும்?" என்று நினைத்துக் கொண்டு தருக்குற்று இருக்கக் கூடாது. கற்றது கைமண்ணளவு. கல்லாதது உலகளவு. எல்லாம் தெரிந்தவர்களும் உலகில் இல்லை. எதுவுமே தெரியாதவர்களும் உலகில் இல்லை. ஆதலால் அடக்கமாகவும் பணிவாகவும் இருக்க வேண்டும். பணிவு மனிதனின் வாழ்வை உயர்த்தும். - திருமுருகக் கிருபானந்த வாரியார்

நரம்பு தளர்ச்சி தீர லேகியம்.




தேவையான பொருட்கள்:
  • சுக்கு, மிளகு, திப்பிலி, அதிமதுரம், சீரகம், ஏலம், வால்மிளகு, கிராம்பு, ஜாதிக்காய், ஜாதிபத்ரி - தலா 10கிராம்.
  • சீனா கற்கண்டு -700கிராம்.
  • பசும்பால்- 700மி.லி.
  • நெய்-175கிராம் .
  • தேன்-175 கிராம்.
செய்முறை:

1. சுக்கு, மிளகு, திப்பிலி, அதிமதுரம், சீரகம், ஏலம், வால்மிளகு, கிராம்பு, ஜாதிக்காய்,
ஜாதிபத்ரி ஆகியவற்றை இளம் சூட்டில் வறுத்து சூரணம் செய்து கொள்ளவும். 

2. சீனா கற்கண்டை பசுவின் பாலில் போட்டு பாகு செய்து வைத்துக் கொள்ளவும்.

3. சூரணங்களை பாகில் தூவிக் கிண்டி பின் நெய் விட்டு நன்றாகக் கிளறிக் கொடுத்து கீழே இறக்கி வைக்கவும்.

4. சுத்தமான தேன் விட்டுக் கிளறி ஜாடியில் பத்திரப் படுத்தவும்.

தினசரி ஒரு வேளைக்கு நெல்லிக்காய் அளவு என காலை மாலை இரண்டு வேளையும் சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி நீங்குவதோடு வயிறு
மந்தம்,அஜீரணம் இவைகளும் நீங்கும்.